பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!
மன்னவனின் பிறப்பால்
புவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!
மன்னவனின் வரவால்
பாவமில்லை, இனி சாபமில்லை
இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
இறைவன் பிறந்ததால்
1.
வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்
பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள் – பூமிக்கொரு
2.
தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்
பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்தநாள்
பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் – பூமிக்கொரு
bumikkoru punidham vanthdhathippo!
mannavanin pirappal
puvukkoru iradsippum vanthdhathippo!
mannavanin varaval
pavamillai, ini sapamillai
inpaththirkum ini ellaiyillai
iraivan piranthdhathal
1.
vanangkalum vanththu vazhththiduthe vasanthdhaththin thuvakka nal
kanangkalum kathil keddiduthe karirul akanra nal
iravinil thondrum udhayame nam iyesuvin piranthdha nal
badhakar nammil pavaththai meedka balanay vanthdha nal – bumikkoru
2.
thudharkalin kanam olikkuthe thuyavar thondrum nal
uyirkalil puththuyir thonruthe unnadhar vanthdha nal
balaiyil vanthdha solaiye nam balakan biranthdha nal
badhakar nammil pavaththai meedka balanay vanthdha nal – bumikkoru